பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 07) நண்பகல் 12 மணி அளவில் காணொலி காட்சி மூலம் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளைத் தொடங்கிவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொள்கின்றனர். ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 8,379.62 கோடி ரூபாயாகும்.
முதல்கட்டமாக இந்தத் திட்டத்தின் மூலம் 29.4 கி.மீ. நீளமுள்ள இரண்டு பாதைகள் அமைக்கப்பட உள்ளன. அப்பாதைகள் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்திரா உள்ளிட்ட முக்கியச் சுற்றுலாத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களை இணைக்கின்றன.
இதையும் படிங்க: ஒரு சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் - பிரதமர் மோடி