ETV Bharat / bharat

சங்ககால தமிழ் இலக்கியங்களை நினைவு கூர்ந்த பிரதமர்.. நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

author img

By ANI

Published : Oct 14, 2023, 10:24 AM IST

Ferry services between Nagapattinam and SrilLanka's Kankesanthurai; தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கானொளிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

  • Ferry services between India and Sri Lanka will enhance connectivity, promote trade and reinforce the longstanding bonds between our nations. https://t.co/VH6O0Bc4sa

    — Narendra Modi (@narendramodi) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து, இந்த நிகழ்வில் கானொளிக் காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, “இந்தியா - இலங்கை இடையிலான வர்த்தகம் மற்றும் பன்முகம் கொண்ட உறவில் ஒரு புதிய பகுதியை தொடங்கி உள்ளோம். நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்கியதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு முக்கிய வலிமை கிடைத்து உள்ளது. இந்தியா - இலங்கை இடையில் ஆழமான கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் குடிமையியல் வரலாறு உள்ளது.

  • #WATCH | Nagapattinam, Tamil Nadu: Union Minister of Ports, Shipping & Waterways and Ayush, Sarbananda Sonowal flags off the Ferry service between Tamil Nadu's Nagapattinam and Sri Lanka's Kankesanturai. External Affairs Minister Dr S Jaishankar joined the event virtually

    (Video… pic.twitter.com/BgtlQiir1P

    — ANI (@ANI) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இலங்கை உள்பட பல்வேறு நாடுகள் உடன் நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் கடல்வழி வாணிபத்தை நீண்ட காலமாக கொண்டு உள்ளன. தமிழ் இலக்கியத்தில் ஒரு வரலாற்று முனையமாக பூம்புகார் துறைமுகம் இருந்திருக்கிறது. சங்க கால இலக்கியங்களாக பட்டினப்பாலை மற்றும் மணிமேகலை ஆகியவை இந்தியா - இலங்கை இடையிலான படகு மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளன.

சிறந்த புலவரான சுப்ரமணிய பாரதியாரின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற வரிகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளைக் குறிக்கிறது. எனவே, இந்த கப்பல் போக்குவரத்து சேவையானது நமது வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை உயிர்ப்பித்து உள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபர் விக்ரமசிங்கே உடனான சந்திப்பின்போது, நாங்கள் பொருளாதார உறவுகள் குறித்து ஆலோசனை செய்தோம். உறவை வலுப்படுத்துதல் என்பது இரண்டு நாடுகள் இணைந்து செயல்படுவது மட்டுமல்ல. இரு நாட்டு மக்களும், இரு நாட்டவரின் இதயங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

அதேநேரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவை மக்கள் உடன் மக்களாக இணைத்திருத்தல் வேண்டும். மேலும், 2015ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து கொழும்புவுக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது, அது பின்னர் செயல்படுத்தப்பட்டது.

மேலும், சென்னையில் இருந்து ஜாஃப்னாவுக்கு 2019 முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. அந்த வகையில், தற்போது நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையின் மூலம், இந்தியா - இலங்கை இடையிலான உறவில் மற்றொரு அடி எடுத்து வைக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த சேவையின் மூலம், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு 30 நிமிடத்தில் பயணணிக்க முடியும். இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தை ரூ.3 கோடி செலவில் மத்திய அரசு புனரமைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாகை - இலங்கைக்கு நாளை முதல் கப்பல் சேவை.. 10 நாட்கள் மட்டுமே இயக்கம்.. தொடக்க விழாவுக்காக 75% ஸ்பெஷல் ஆஃபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.