ETV Bharat / bharat

நாசிக் ஸ்ரீகாலாராம் மந்திரில் இசைக்கருவிகளை வாசித்த படி 'ராமாயணம்' படித்த பிரதமர் மோடி..!

Prime Minister Modi: மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலாராம் மந்திரில் நடந்த 'ஸ்வச்சதா அபியான்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 17,840 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது பாலத்தை திறந்துவைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 9:10 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாசிக் பகுதியின் பஞ்சவடி அருகே கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ஸ்ரீகால ராம் மந்திர்-க்கு இன்று (ஜன.12) வருகை தந்தார். முன்னதாக, அயோத்தியில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த பவ்யா ராம் மந்திர் 'ப்ரான் ப்ரதிக்‌ஷா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

  • Prayed at the Shree Kalaram Temple in Nashik. Feeling incredibly blessed by the divine atmosphere. A truly humbling and spiritual experience. I prayed for the peace and well-being of my fellow Indians. pic.twitter.com/wHJQYrVHnz

    — Narendra Modi (@narendramodi) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஸ்ரீகாலாராம் மந்திரில் பேசிய பிரதமர் மோடி, நாடெங்கும் உள்ள கோயில்களைத் தூய்மையாக வைத்திருக்கப் பக்தர்களும், நாட்டுக் குடிமக்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அப்போது, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியின் போது, ராமன் பஜனைப் பாடல்களை ஜால்ரா இசைக்கருவியை இசைத்த படியே மோடி பாடியபோது, அங்கிருந்த இசைக்கலைஞர்களின் வாத்தியங்களும் சேர்ந்து ஒலித்தது என அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த AI மொழிபெயர்ப்பின் மூலம் இந்தி மொழியிலிருந்து மராத்தி மொழியில் கேட்டறிந்தார். அதில், அயோத்திக்கு ராமன் திரும்புவதை விளக்கும் 'யுத் காந்தா' பகுதி வாசிக்கப்பட்டது.

  • At the Shree Kalaram Temple, I had the profound experience of hearing verses from the Bhavarth Ramayana written in Marathi by Sant Eknath Ji, eloquently narrating Prabhu Shri Ram's triumphant return to Ayodhya. This recitation, resonating with devotion and history, was a very… pic.twitter.com/rYqf5YR5qu

தொடர்ந்து அங்கிருந்த சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி, நாசிக் பகுதியிலிருந்த அவரது சிலைக்கு அவரது பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ராமாயணத்துடன் முக்கிய தொடர்பிலிருந்த பஞ்சவடி பகுதியில் இந்த ஸ்ரீகாலாராம் மந்திர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.22-ல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடி ராமர் வரலாற்றோடு தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த நாசிக் கோயிலுக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடி கோயிலின் தரைதளத்தைச் சுத்தம் செய்த வீடியோ ஒன்றை மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் அவ்வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாகத் தனது X தளத்தில் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட பதிவில், 'பிரதமர் மோடி இன்று நாசிக்கில் உள்ள ஸ்ரீகாலாராம் மந்திரில் 'ஸ்வச்சதா அபியான்'-ல் பங்கேற்றார். நாடு முழுவதும் உள்ள கோயில்களில் ஸ்வச்சதா நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பயணத்தின் போது, பிரதமர் மோடி மும்பையில் உள்ள செவ்ரி மற்றும் புனே இடையே சுமார் 17,840 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்டப்பாலமான அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது பாலத்தைத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தர பிரதேசத்தில் 5 கூடுதல் விமான நிலையங்கள்! திறப்பு எப்போது? மத்திய அமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.