காந்தி நகர்: குஜராத் தலைநகர் காந்தி நகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வசித்து வருகிறார். அவர் தனது 100ஆவது பிறந்தநாளை இன்று (ஜூன் 18) கொண்டாடுகிறார். இந்நிலையில், காந்தி நகரில் உள்ள தாயாரின் வீட்டிற்கு பிரதமர் மோடி இன்று (ஜூன் 18) சென்றார்.
பிரதமரும் அவரின் தாயாரும் இணைந்து பூஜை நடத்தி வழிபட்டனர். தாயாருக்கு பாதைப்பூஜை மேற்கொண்ட பிரதமர், அவருக்கு மாலையிட்டு, சால்வை அணிவித்து ஆசி பெற்றார். இருவரும் இனிப்புகளை பரிமாறிய பின்னர் சிறிதுநேரம் உரையாடினர். அதன்பின்னர், தாயாரிடம் இருந்து பிரதமர் மோடி விடைபெற்றுக்கொண்டார்.
பிரதமர் மோடி இன்றும் (ஜூன் 18), நாளையும் (ஜூன் 19) இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். முன்னதாக, காந்தி நகரில் உள்ள ஒரு சாலைக்கு பிரதமரின் தாயார் ஹீராபென்னின் நினைவாக, 'பூஜ்ய ஹீராபென் மார்க்' என பெயர் சூட்டப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதிக்க வயது தடை இல்லை: ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று அசத்திய 106 வயது பாட்டி!