ETV Bharat / bharat

நாட்டுக்கு தேவை வளர்ச்சியே, குறுக்குவழி அரசியல் அல்ல.. பிரதமர் நரேந்திர மோடி.. - மகாராஷ்டிராவில் மோடி உரை

மகாராஷ்டிராவில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

PM Modi at Nagpur
PM Modi at Nagpur
author img

By

Published : Dec 11, 2022, 4:41 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கட்டி முடிக்கப்பட்ட நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு காப்ரி ரயில் நிலையத்தில் அடிக்கல் நாட்டினார். அதோடு காப்ரி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோமோட்டிவ் சதுக்கம் மற்றும் பிரஜாபதி நகர் முதல் லோக்மான்யா நகர் வரையிலான இரண்டு மெட்ரோ ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஃபிரீடம் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நாக்பூர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து காப்ரி மெட்ரோ ரயில் நிலையம் சென்றடைந்தார். அப்போது இ-டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, ரயிலில் பயணித்த மாணவர்கள், பொது மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடினார். இதுகுறித்த நிழச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் இரட்டை எஞ்சின் அரசாங்கம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதற்கு இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் சான்றாகும்.

நாட்டிற்கு நிலையான வளர்ச்சியே தேவை, குறுக்குவழி அரசியல் அல்ல. குறுக்குவழி அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகள், வரி செலுத்துவோரின் பணத்தை கொள்ளையடித்து, பொய்யான வாக்குறுதிகள் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணுகின்றனர். இந்த அரசியல்வாதிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களால் நாட்டில் வளர்ச்சி ஏற்படாது. அனைத்து மாநிலங்களின் ஒருங்கிணைந்த பலம், முன்னேற்றம், மேம்பாடு மூலம் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்.

சில அரசியல் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயல்கின்றன. இதுபோன்ற அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளை மக்கள் அம்பலப்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் எனது வேண்டுகோள் குறுக்குவழி அரசியலுக்கு பதிலாக நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நிலையான வளர்ச்சி மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெங்களூருவில் ஜி20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.