ETV Bharat / bharat

கதி சக்தி திட்டத்தில் அரசு - தனியார் பங்களிப்பு: பிரதமர் மோடி பேச்சு - விரைவு சக்தியின் தொலைநோக்குப் பார்வை

அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு நிலை வரையிலான கட்டமைப்பு திட்டமிடலில் அரசு-தனியார் துறையின் சரியான பங்களிப்பை விரைவு-சக்தி உறுதி செய்யும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Feb 28, 2022, 3:04 PM IST

‘விரைவு சக்தியின் தொலைநோக்குப் பார்வை’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு நிதியமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, "21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘விரைவு சக்தி’யை இந்த ஆண்டின் பட்ஜெட் இலக்காக வைத்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு அடிப்படையிலான வளர்ச்சி என்ற வழிகாட்டல் நமது பொருளாதாரத்தின் பலத்தை அசாதாரணமாக அதிகரிக்கவும், பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும். திட்டங்களை முடிப்பதில் பாரம்பரியமான வழிகளில் சம்பந்தப்பட்டவர்களிடையே ஒருங்கிணைப்பு குறைபாடு உள்ளது.

சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளிடையே தெளிவான தகவல் குறைபாடே இதற்குக் காரணமாக இருந்தது. விரைவுசக்தி காரணமாக தற்போது அனைவரும் முழுமையான தகவலுடன் தங்களின் திட்டத்தை உருவாக்க முடியும். இது நாட்டின் ஆதார வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கும். அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு நிலை வரையிலான கட்டமைப்பு திட்டமிடலில் அரசு-தனியார் துறையின் சரியான பங்களிப்பை விரைவு-சக்தி உறுதி செய்யும்.

அரசு நடைமுறையுடன் ஒன்றிணைந்து தனியார் துறையினர் எவ்வாறு சிறந்த பயன்களை அடைய முடியும் என்பது பற்றிய சிந்தனையை இந்த இணையவழி கருத்தரங்கு உருவாக்க வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: உக்ரைன் ✈ இந்தியா: புறப்பட்ட 5ஆவது விமானம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.