டெல்லி: G20 உச்சி மாநாட்டின் நிறைவு உரையை, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றினார் . G20 உச்சி மாநாடு நேற்று மற்றும் இன்று (செப்.9 மற்றும் செப்.10) ஆகிய இரண்டு நாட்கள் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கு பெற்றனர். G20 உச்சி மாநாட்டின் இறுதி நன்றி உரையை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றினார். அப்போது, மாநாட்டில் செய்யப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ய நவம்பரில் காணொலி காட்சி முலம் G20 அமர்வு நடைபெறும் என அறிவித்தார்.
-
The ideals of Mahatma Gandhi reverberate globally. pic.twitter.com/J4Ko3IXpe4
— Narendra Modi (@narendramodi) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The ideals of Mahatma Gandhi reverberate globally. pic.twitter.com/J4Ko3IXpe4
— Narendra Modi (@narendramodi) September 10, 2023The ideals of Mahatma Gandhi reverberate globally. pic.twitter.com/J4Ko3IXpe4
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, G20 மாநாட்டின் தலைவர் பதவியில் இந்தியா நவம்பர் 2023 வரை பொறுப்பில் உள்ளது. இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல முக்கிய ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் முலம் வேகமான முன்னேற்றம் எவ்வாறு அடைய முடிகிறது என்பதை ஆராய்வது நமது கடமை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐநா சீர்திருத்தங்களுக்கு ஒரு புதிய உத்வேகம் - பிரதமர் மோடி
மேலும், G20 மாநாடு குறித்து நவம்பர் மாதம் காணொலி வாயிலாக நடத்துவோம் என முன்மொழிகிறேன். இந்த மாநாட்டின் முலம் முடிவு செய்யப்பட்ட அறிவிப்புகள் மற்றும் தலைப்புகள் குறித்து காணொலியில் இணைந்து ஆய்வு செய்யலாம். இந்த கூட்டத்தில் அனைவரும் இணைவீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இந்த G20 உச்சி மாநாடு முடிவதற்கு முன்பு, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் G20க்கான தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். மேலும் எனது நண்பர் பிரேசில் அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
கடந்த ஆண்டு இந்தோனேசியா பாலி நடைபெற்ற G20 மாநாட்டின் முடிவில் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் இருந்து G20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு 2022 டிசம்பர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர். மேலும் இந்த G20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் நவம்பர் இறுதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மாநாட்டின் முதல் நாளான நேற்று (செப்.9) ஆரம்ப நிகழ்வு G20 தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இன்று (செப்.10) G20 தலைவர்கள் அனைவரும் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி!