நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையின் 56ஆவது எழுச்சி நாள் இன்று(டிச.01) கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து தனது பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை என்பது புகழ்பெற்ற வீரமான படையாகும். எப்போதும் உதவும் வகையிலான அர்ப்பணிப்புடன், களச்சூழல் சரியாத இல்லாதபோதிலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உதவக்கூடிய பாதுகாப்புப் படையாகும். இந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களால், இந்தியா பெருமையடைகிறது. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் 56ஆவது எழுச்சி நாளையொட்டி, அனைத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களையும் அவரது சேவைக்கும் நாட்டிற்கு செய்யும் அர்ப்பணிப்பிற்காகவும் வணங்குகிறேன்' என்றார்.
இதையும் படிங்க:வலுவடைந்தது 'புரெவி' புயல் சின்னம் - கனமழைக்கு வாய்ப்பு