ETV Bharat / bharat

35 பயிர்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு - விவசாயிகளிடம் உரையாற்றிய பிரதமர்

பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஏஆர்) உருவாக்கப்பட்ட 35 பயிர் வகைகளை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

விவசாயிகளிடம் உரையாற்றிய பிரதமர்
விவசாயிகளிடம் உரையாற்றிய பிரதமர்
author img

By

Published : Sep 29, 2021, 6:41 AM IST

டெல்லி: சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர்களை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாட்டுக்கு நேற்று (செப். 28) அர்ப்பணித்தார். ராய்ப்பூர் நகரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தில் (National Institute of Biotic Stress Management) புதிதாக கட்டப்பட்டுள்ள வளாகத்தையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

மேலும், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதுகள் வழங்கிய அவர், புது முறைகளைப் பயன்படுத்தி வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பயிர்கள்

பருவநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஏஆர்) சிறப்புப் பண்புகளைக் கொண்ட 35 பயிர் வகைகள் நடப்பாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

வறட்சியைத் தாங்கும் கொண்டைக்கடலை வகைகள், விரைவாக விளையும் சோயாபீன், நோய் எதிர்ப்பு அரிசி, செறிவூட்டப்பட்ட கோதுமை வகைகள், மக்காச்சோளம் ஆகியவை இதில் அடங்கும்.

  • Need of the hour is:

    'Back to basics' and ‘march to the future.’

    Let us carry forward best practices of the past and work towards a glorious future. pic.twitter.com/mzDgaTlxgm

    — Narendra Modi (@narendramodi) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சில பயிர்களில் காணப்படும் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளை நிவர்த்தி செய்யும் சிறப்பு பண்புகள் இந்த 35 பயிர்களில் உள்ளன. சோயாபீன், சோளம் மற்றும் பேபி கார்ன் போன்றவற்றில் சிறப்புப் பண்புகளைக் கொண்ட பிற வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முன்னுரிமை

பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, "கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளில், விவசாயம் தொடர்பான சவால்களை தீர்க்க முன்னுரிமை அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தற்போது மாறிவரும் பருவநிலைகளுக்கு ஏற்ப தங்களை தக்க வைத்து கொள்ளும் அதிக ஊட்டச்சத்துள்ள விதைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

  • सॉयल हेल्थ कार्ड से लेकर नीम कोटेड यूरिया तक,

    MSP में रिकॉर्ड बढ़ोतरी से लेकर e-Nam तक,

    सिंचाई परियोजनाओं से लेकर सौर ऊर्जा तक,

    हमें अपने अन्नदाताओं की सेवा का सौभाग्य प्राप्त हुआ है। pic.twitter.com/VvfZ3pEYQ8

கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், கடந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய வெட்டுக்கிளித் தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், அதனைத் தடுக்கவும் பல முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. அது விவசாயிகளை அதிக சேதங்களில் இருந்து காப்பாற்றியது.

நலத்திட்டங்கள்

விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கும்போது அவர்களின் வளர்ச்சி விரைவானதாக இருக்கும். நிலத்தின் பாதுகாப்பிற்காக ரூ. 11 கோடி மண்வள அளவீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு நீர்ப் பாதுகாப்பை வழங்குவதற்காக நிலுவையில் உள்ள சுமார் 100 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவு செய்வதற்கான பிரசாரங்கள், பயிர்களை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு புதிய விதைகளை வழங்குவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்யலாம்.

தொழில்நுட்பம்

குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிப்பதோடு, கொள்முதல் செயல்முறையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதிகமான விவசாயிகள் பலன் பெற முடியும்.

குறுவை சாகுபடிப் பருவத்தில் 430 லட்ச மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுநோய் காலத்தின் போது கோதுமை கொள்முதல் மையங்கள் மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், வங்கிகளிடமிருந்து உதவி பெறுவதை எளிதாக்கியுள்ளோம். விவசாயிகள் இன்று வானிலைத் தகவலை சிறந்த முறையில் பெறுகின்றனர். சமீபத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் - விஞ்ஞானிகள் கூட்டணி

பருவநிலை மாற்றம், புதிய வகைப் பூச்சிகள், புதிய நோய்கள், தொற்றுநோய்கள் ஆகியவை தொடர்ந்து உருவாகி வருகிறது. இதன் காரணமாக மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதில், கால்நடைகள், பயிர்கள் கூட பாதிக்கப்படுகிறது.

இதுபோன்ற விஷயங்களில் தொடர்ச்சியான ஆராய்ச்சி அவசியம். அறிவியல், அரசு, சமூகம் ஆகியவை இணைந்து செயல்படும் போது முடிவுகள் சிறப்பாக இருக்கும். புதிய சவால்களை எதிர்கொண்டு நாட்டை வலுப்படுத்த விவசாயிகள், விஞ்ஞானிகள் ஆகியோரின் கூட்டணி அவசியமானது.

அறிவியல், ஆராய்ச்சித் தீர்வுகளுடன் சத்தான தானியங்கள், சிறுதானியங்களை வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த 35 பயிர்களை வளர்க்கலாம் என்பதே இதன் நோக்கம்.

வரும் 2022ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து ஐ.நா வழங்கிய வாய்ப்புகளை பயன்படுத்த மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

நமது பழங்கால விவசாய மரபுகளைக் கைவிடாமல், அதே நேரம் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதும் மிகவும் முக்கியம். நவீனத் தொழில்நுட்பம், புதிய விவசாயக் கருவிகள் போன்றவை எதிர்கால விவசாயத்தின் மையப் புள்ளியாக உள்ளன. நவீன விவசாய இயந்திரங்களையும், உபகரணங்களையும் ஊக்குவிக்கும் முயற்சிகள் தான் இன்று நல்ல தீர்வுகளை அளிக்கின்றன" என்றார்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டு நலனுக்கு அவசியம் - நிதிஷ் குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.