2019ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கரோனா பரவத் தொடங்கிய நிலையில், பொது முடக்கத்தை அமல்படுத்தி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளத் தொடங்கின.
அதன் ஒரு பகுதியாக மக்களின் நிதித் தேவையை கருத்தில் கொண்டு கரோனா சூழலை எதிர்கொள்ள பி எம் கேர்ஸ் நிதியத்துக்கு நிதி அளித்து உதவுமாறு பிரதமர் மோடி கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினருக்கு பிஎம் கேர்ஸ் நிதியத்தில் நிதி அளித்து வந்த நிலையில், மற்றொருபுறம் சர்ச்சைகளும் வெடித்தன. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும்போது எதற்காக இந்த அமைப்பு என எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து சாடி வருகின்றனர்.
இந்நிலையில், ”பி எம் கேர்ஸ் நிதியம் மக்கள் பணத்துடன் பொய்களும் ஊழலும் அடங்கிய கருந்துளை” என காட்டமாக விமர்சித்து காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், சிஏஜி தணிக்கை ஆகிய வரம்புகளுக்கு அப்பாற்பட்டதாக பிஎம் கேர்ஸ் செயல்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக பிஎம் கேர்ஸை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழா: வண்ணமய கொண்டாட்டங்களுடன் விடைபெற்ற வீரர்கள்!