ETV Bharat / bharat

'நண்பன்' பட விஜய் போல் எம்பிபிஎஸ் வகுப்பில் நுழைந்த பிளஸ் 2 மாணவி! - நண்பன் திரைப்படம்

கேரளாவில் ’நண்பன்’ படத்தில் வரும் விஜய் போல் பிளஸ் 2 படித்துக்கொண்டிருக்கும் மாணவி, எம்பிபிஎஸ் வகுப்பில் நுழைந்து நான்கு நாட்கள் பாடமும் கவனித்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

’நண்பன்’ பட விஜய் போல் எம்பிபிஎஸ் வகுப்பில் நுழைந்த பிளஸ் 2 மாணவி..!

author img

By

Published : Dec 9, 2022, 4:41 PM IST

கோழிக்கோடு: பிளஸ் டூ மாணவி ஒருவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி நிர்வாகத்திற்கே தெரியாமல் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்பில் நான்கு நாட்கள் கலந்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த இந்த பிளஸ் 2 மாணவி முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்பில் கலந்துகொண்டு கல்லூரி வருகைப்பதிவிலும் இடம்பெற்றுள்ளார்.

தொடர்ந்து ஐந்தாவது நாள் இந்த மாணவி வகுப்பில் கலந்துகொள்ளாததைக் கவனித்த கல்லூரி முதல்வர், கல்லூரி அனுமதிப் பதிவிலேயே இந்த மாணவியின் பெயர் இல்லாமல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து அந்தக் கல்லூரியின் முதல்வர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், தனக்கு எம்பிபிஎஸ் படிப்பதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாக பலருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது, அந்த மாணவி தற்போது பள்ளியில் பிளஸ் 2 படித்துக்கொண்டிருப்பதும் எம்பிபிஎஸ் படிப்பிற்கான தனது ஆர்வத்தின் காரணமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டுருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் சாஜித் குமார் கூறுகையில், “இதுவரை இதுபோன்ற சம்பவம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நடந்ததே இல்லை. ஆகையால் நாங்கள் யாரும் இதை எதிர்பார்க்கவே இல்லை. வகுப்பு தாமதமானதால் எந்த வித சோதனைகளுமின்றி மாணவர்கள் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டுவிட்டதாக வகுப்பாசிரியர் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து தகவலறிந்ததும் நாங்கள் எங்கள் தரப்பில் விசாரிக்கத் தொடங்கிவிட்டோம்” எனப் பேசினார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டில் வெளியான நண்பன் திரைப்படத்தில் பஞ்சவன் பாரி வேந்தன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜயும் தனக்கு ஆர்வமிக்க அனைத்து வகுப்பிலும் அமர்ந்து பாடம் கவனிப்பார். முதலாமாண்டு பொறியியல் படித்துக்கொண்டு இரண்டாம் ஆண்டு பொறியியல் வகுப்பில் அமர்ந்து பாடம் கவனிப்பார். அதுமட்டுமின்றி படத்தில் வரும் ஒரு படிப்பில் ஆர்வமிக்க சிறுவனையும் இதைக் கடைபிடிக்க அறிவுறுத்துவார் . தற்போது கேரள மாணவி தனது மருத்துவ ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கும் சம்பவம் நண்பன் படத்தின் பஞ்சவன் பாரி வேந்தனை சற்று நினைவுபடுத்துகிறது.

இதையும் படிங்க: இன்று தேர்வாகிறார் இமாச்சல் முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.