மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டமாக நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நந்திகிராம் தொகுதி உள்ளிட்ட 30 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று(ஏப்.1) நடைபெற்றது.
இந்நிலையில் உலுபெரியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர், வங்க மக்கள் மம்தா பானர்ஜியை பதவியிலிருந்து இறக்க முடிவு செய்துவிட்டார்கள். நந்திகிராம் மக்கள் இன்று தங்கள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளார்கள். எனவே, மம்தா மற்றொரு தொகுதியில் இரண்டாவது முறை வேட்புமனு தாக்கல் செய்வது நல்லது. அங்கு மக்கள் மம்தாவை தோற்கடிப்பார்கள்.
என்னை சுற்றுலா பயணி எனவும், வெளியூர்க்காரன் எனவும் மம்தா கூறுகிறார். ஊடுருவல்காரர்களை சொந்த மக்கள் எனக் கூறும் மம்தா, பாரத தாயின் புதல்வர்களை வெளிநபர் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார். இந்தியர்களை பிரித்து பேசுவதை மம்தா நிறுத்த வேண்டும் எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மோடி மீது புகார்களை அடுக்கும் மம்தா: தேர்தல் ஆணையத்தின் மீதும் அதிருப்தி!