ETV Bharat / bharat

பிரியாணியோ 1 ரூபாய் - தண்டமோ 100 ரூபாய் - தெலங்கானாவில் தான் இந்த கூத்து! - advertisement

1 ரூபாய்க்கு பிரியாணி கிடைக்கின்றது என்பதற்கு ஆசைப்பட்டு, 100 ரூபாய் தண்டம் கட்டிய நிகழ்வு, தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் அரங்கேறி உள்ளது.

People got fined Rs.100  when they went for Biryani for One Rupee Note
பிரியாணியோ 1 ரூபாய் - தண்டமோ 100 ரூபாய் - தெலுங்கானாவில் தான் இந்த கூத்து!
author img

By

Published : Jun 17, 2023, 5:03 PM IST

கரீம்நகர்: தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று (16ஆம் தேதி) திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும்; பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து இருந்தது.

மேலும் ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தன. விளம்பரத்தைக் கண்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பிரியாணியை வாங்கி சாப்பிட்டே தீர வேண்டும் என எண்ணி, சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டல் முன்பு உள்ள சாலையில் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பிரியாணிக்கு ஆசைப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த கடை முன்பு திரண்டனர். இதன்காரணமாக, அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார், உடனடியாக குறிப்பிட்ட ஹோட்டல் இருக்கும் பகுதிக்கு விரைந்தனர்.

பிரியாணி வாங்க வந்தவர்கள், தங்களது வாகனங்களை, அந்த சாலையில், சரியாக, சீராக நிறுத்தாததன் காரணத்தினாலேயே, இந்தப் போக்குவரத்து நெரிசல் என்பதை அறிந்த போலீசார், அங்கு வாகனம் நிறுத்தி இருந்த வாகன ஓட்டிகளிடம், 100 ரூபாய் அபராதமாக விதித்தனர். 1 ரூபாய் பிரியாணிக்கு ஆசைப்பட்டு, 100 ரூபாய் இழந்த சம்பவம், பிரியாணி பிரியர்களிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரியாணி என்றால், எவ்வித வேலையானாலும் விட்டுவிட்டு வரத் தயார் என்ற மனநிலையில் உள்ள நம் மக்கள், நடப்பு ஆண்டின் (2023) புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10.25 மணிக்குள், 3.50 லட்சம் எண்ணிக்கையிலான பிரியாணிகளை ஆர்டர் செய்து உள்ளதாக, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரியாணி பிரியர்களுக்காக, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில், 2 மணி பிரியாணி, 4 மணி பிரியாணி என நேரங்களையே, கடைகளின் பெயராகக் கொண்டு, பிரியாணி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இரவு பணியின் போது, விடியற்காலையில் நன்றாகப் பசி எடுக்கத் தொடங்கும். அப்போது முதலில் நினைவிற்கு வருவது, சூடான பிரியாணி தான் என்று, தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் தெரிவித்து உள்ள நிகழ்வு, பிரியாணி உணவு, எந்த அளவிற்கு, நமது வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறி உள்ளது என்பதை அறிய முடிகிறது.

இதையும் படிங்க: Savings Schemes: பெண் குழந்தை பெற்றவரா நீங்கள்? : செல்ல மகளுக்கான சூப்பர் சேவிங் திட்டங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.