ராஜஸ்தானிலிருந்து கேரளாவிற்கு 12 சிறுமிகள் கடத்தல்... பாதிரியார் உள்பட 3 பேர் கைது.... - kerala human trafficking
ராஜஸ்தானிலிருந்து கேரளாவிற்கு ரயில் மூலம் 12 சிறுமிகளை கடத்திய பாதிரியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்: ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கிளம்பிய ஓகா எக்ஸ்பிரஸ் நேற்றிரவு (ஜூலை 28) கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில் 12 சிறுமிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்துள்ளனர். இதனால், ரயில்வே போலீசார் சிறுமிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிறுமிகள் கடத்தப்பவரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிகளை கூட்டி வந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், கேரளாவில் கருணா பவன் என்னும் அறக்கட்டளையின் பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் என்பவர் ராஜஸ்தானை சேர்ந்த புரோக்கர்கள் லோகேஷ் குமார், ஷியாம் லால் இருவரது உதவியுடன் 12 சிறுமிகளையும் கடத்திவந்துள்ளார். இந்த கருணா பவன் அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் வர்கீஸ் சட்டவிரோதமாக நடத்திவந்துள்ளார். சிறுமிகளும் அனைவரும் குழந்தைகள் நல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் அரசிற்கும், சிறுமிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாவூர் புல்லுவாஜியில் உள்ள கிறிஸ்தவ இல்லத்திற்கு சிறுமிகள் கொண்டு செல்லப்படயிருந்தனர். விசாரணை நடந்திவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்