ETV Bharat / bharat

கங்கை கரையோரம் புதைக்கப்பட்டுள்ள சலடங்கள்: கோவிட் அச்சத்தில் உள்ளூர்வாசிகள்! - மணலில் சடலங்கள் புதைப்பு

லக்னோ: கங்கை நதிக்கரையோரம் மணலில் பல சடலங்கள் புதைக்கப்பட்டு இருக்கும் சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே கோவிட் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

UP's Unnao
கங்கை கரையோரம்
author img

By

Published : May 13, 2021, 1:51 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் கங்கை கரையோரத்தில் உள்ள இரண்டு பகுதிகளில் சடலங்கள் மணலில் புதைக்கப்பட்டு கிடக்கும் சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்தச் சடலங்கள் துணிகளால் மூடப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவை கரோனாவால் பாதிக்கப்பட்ட சடலங்களா என்பது உறுதியாக தெரியவில்லை. இச்சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து உன்னாவ் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் ரவீந்திர குமார் கூறுகையில், " சிலர் உடல்களை எரிப்பதில்லை. அதற்கு மாறாக, ஆற்றின் கரையோரம் சடலங்களைப் புதைத்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு அலுவலர்களை அனுப்பியுள்ளேன். இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இந்து சடங்குகளின்படி தகனம் செய்வதற்கு தற்போது ரூ .15,000 முதல் 20,000 வரை செலவாகுவதால், ஏழை மக்கள் ஆற்றங்கரையோரம் அடக்கம் செய்ய முடிவு செய்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கங்கை கரையோரம் பல சடலங்கள் மிதந்து வந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.