ETV Bharat / bharat

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி... பாகிஸ்தான் அரசு! - World Cup Cricket 2023

இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட அந்நாட்டு அரசு அனுமதி அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Cricket
Cricket
author img

By

Published : Aug 6, 2023, 9:53 PM IST

இஸ்லாமாபாத் : வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு உள்ள அட்டவணையின் படி ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

ஐசிசி இதனை நிராகரித்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் அணி இந்தியாவில் உலக கோப்பை போட்டிகளில் விளையாடும் மைதானங்கள், வீரர்கள் மற்றும் குழுவினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்புக் குழு இந்தியா வந்து இதுகுறித்த சோதனைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தான் அணிக்கான தூதுக் குழு இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாட வருவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது. ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், பாகிஸ்தானின் இந்த முடிவை எடுத்தது.

இருப்பினும் பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து முழு கவனம் கொண்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின்போது முழு பாதுகாப்பு குறித்து அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறோம்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ராகுலுக்கு எம்பி பதவியை மீட்டுத் தர தாமதம் - நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்க சதி என குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.