இங்கிலாந்து: லண்டனில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொது மக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக நவீன பெயின்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சிறுநீர் கழிப்பு எதிர்ப்பு பெயின்ட் anti-pee-paint என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த பெயின்டில் உள்ள ரசாயனக் கலவை குறிப்பிட்ட சுவற்றில் வர்ணம் பூசியதும் பல அடுக்குகளாக ஒன்றிணைந்து சுவற்றின் மேற்பரப்புக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
இந்த பெயின்ட் பூசிய சுவற்றில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது, கழிப்பவர் மீது மீண்டும் சிறுநீர் அடிக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக, லண்டனின் சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் சோஹோ பகுதியில் உள்ள பொதுச் சுவர்களில் இந்த பெயின்ட் பூசப்பட்டுள்ளது. தொடர்ந்து பொது சுகாதாரம் மோசமாக உள்ள 10 இடங்களை தேர்வு செய்து பெயின்ட் பூச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மைக்கேல் ஜாக்சனின் வெளிவராத வாழ்க்கைப் பக்கங்களுடன் தயாராகும் 'மைக்கேல்'!