நாட்டின் ஆக்சிஜன் தட்டுப்பாடு சீர் செய்ய மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி, பி.எம். கேர் நிதி மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 500 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய சுகாராத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்பு பதிவாகிவரும் நிலையில், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இதையும் படிங்க: கோவிட் நமது பொறுமையைச் சோதிக்கிறது - பிரதமர் மோடி கவலை