கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகத் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், கேரளாவில் நடுகானி பகுதியில், சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க வாருங்கள் என தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் சுவரொட்டியொட்டி அழைப்பு விடுத்துள்ளனர்.
அதில், "இடது, காங்கிரஸ்,பாஜக கட்சிகளின் கொள்கைகள் அனைத்துமே பெருநிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன.
இது தேசத்துரோகம் தவிர வேறில்லை. பெரு நிறுவனங்கள் மற்றும் பிராமணீய இந்து பாசிசத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருங்கள், மதச்சார்பற்ற, சாதியற்ற, ஜனநாயக இந்தியாவை உருவாக்க அனைவரும் வாருங்கள். நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணிப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் 2021: புதுச்சேரி வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஒரு அலசல்!