ETV Bharat / bharat

Cheetah: மீண்டும் ஒரு சிவிங்கிப் புலி இறப்பு - காரணம் என்ன? - குனோ தேசிய பூங்கா

மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிப்புலி உயிரிழந்ததால், சிவிங்கிப் புலி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Cheetah: மீண்டும் ஒரு சிவிங்கிப் புலி இறப்பு - காரணம் என்ன?

author img

By

Published : Jul 15, 2023, 9:21 AM IST

குவாலியர்: கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து விட்டார். இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 5 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கிப் புலிகளை பிரதமர் திறந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த பிப்ரவரி 12 அன்று 7 ஆண். 5 பெண் என மொத்தம் 12 சிவிங்கிப் புலிகளை மத்தியப்பிரதேச முதலமைச்சர் அதே குவாலியரில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் திறந்து விட்டார். இந்த நிலையில், அனைத்து சிவிங்கிப் புலிகளும் நவீன தொழில்நுட்பங்கள் உடன் சிறப்பு குழுவினரின் கீழ் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று (ஜூலை 14) சூரஜ் என்ற ஆண் சிவிங்கிப் புலி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை உயிரிழந்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது உயிரிழந்து உள்ள சூரஜ் என்ற ஆண் சிவிங்கிப் புலி கடந்த ஜூன் 25 அன்று, தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து வனத்திற்குள் திறந்து விடப்பட்டு உள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிவிங்கிப் புலியின் உடலை நேற்று காலை வன ரோந்துப் பணியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்த சூரஜ் சிவிங்கிப் புலியின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் தேஜஸ் என்ற மற்றொரு ஆண் சிவிங்கிப் புலி காயங்கள் உடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, தேஜஸ் சிவிங்கிப் புலி கழுத்தின் மேல் பகுதியில் காயங்கள் இருந்ததாக கண்டறியப்பட்டது.

மேலும், சிவிங்கிப் புலிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த தொடங்கி உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல் முறையாக கடந்த மார்ச் 27ஆம் தேதி ஷாஷா என்ற சிவிங்கிப் புலி சிறுநீரகக் கோளாறால் உயிரிழந்தது.

அடுத்ததாக உதய் என்ற சிவிங்கிப் புலி ஏப்ரல் 23ஆம் தேதி உயிரிழந்தது. இதனையடுத்து மே 9ஆம் தேதி சிவிங்கிப் புலி 'தக்‌ஷா' உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஒரு சிவிங்கிப் புலிக்குட்டி மே 23ஆம் தேதியும், மேலும் இரண்டு சிவிங்கிப் புலிக் குட்டிகள் மே 25ஆம் தேதியும் உயிரிழந்து உள்ளன.

மேலும், இந்தியாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு சிவிங்கிப் புலி இனம் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனை இந்தியாவின் வனவியல் கோட்பாடோடு உருவாக்க ‘புராஜக்ட் சீட்டா’ என்ற திட்டத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்காவில் இருந்து தனிச் சிறப்பு விமானம் மூலம் முதன் முறையாக 8 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவிங்கிப்புலிகள் தொடர் இறப்பு விவகாரம் - கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைக்கு பரிந்துரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.