மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செப்டம்பர் 5ஆம் தேதி, இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு சென்றிருந்தபோது, பாதுகாப்பு மீறல் ஏற்பட்டது. அங்கு ஆந்திராவை சேர்ந்த எம்பியின் தனிப்பட்ட உதவியாளர் என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சரை சுற்றிய சந்தேகத்திற்க்குறியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மாகாராஷ்டிரா மாநிலம் துலேயைச் சேர்ந்த ஹேமந்த் பவார் (32) என்பது தெரியவந்தது. அவர் உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர், மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சட் வீடுகளுக்கு அருகிலும் சுற்றிவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்துறை அமைச்சரின் வருகையைக் கருத்தில் கொண்டு மும்பை காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், கைது செய்யப்பட்ட பவார் உள்துறை அமைச்சரைச் சுற்றியும், மலபார் ஹில் பகுதியைச் சுற்றியும் மணிக்கணக்கில் சுற்றித் திரிந்துள்ளார். அவரை சந்தேகித்த காவல்துறையினர் அவரிடம் கேட்டபோது, தன்னை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி என்று கூறிவிட்டு, பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.
அந்த நபர் சந்தேகத்திற்குரியவர் என்று சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தபோது, அவர் கைது செய்யப்பட்டார். விவிஐபி வருகையின் போது அந்த போலி அதிகாரி அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
கைது செய்யப்பட்ட ஹேமந்த் பவாரை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க கிர்கான் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எம்பி உதவியாளரின் டையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் பிரபல ரவுடியை கொல்ல முயற்சி; உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு