மும்பை: மகாராடிரா மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மகாராஷ்டிராவில் சுமார் 65 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருந்த நேரத்தில் கூட, குறித்த நேரத்தில் ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தொழில்துறையில் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜனை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறோம்.
தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜன் அளவு மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும், மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் திறப்பு