பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் நைஜீரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அரைநிர்வாணமாக வீதிகளில் சுற்றித்திரிந்தார். அவர், அரை நிர்வாணமாக குழந்தைகள், பெண்களிடம் சென்று பேசி அவர்களை சங்கடமாக உணர வைத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அரை நிர்வாணமாக சுற்றித்திரிந்த நைஜீரிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான ஜேம்ஸ் என்பதும், அவர் ஹென்னூர் குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தென்படுகிறார் என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ