புதுச்சேரி கடற்கரை சாலையில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாடலாம் என்று அறிவிப்பு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் 20 மீட்டருக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலையில் பத்து தடுப்புகளாக பிரிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீ வாத்சவா ஆகியோர் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கடற்கரை சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரி எல்லையில் வாகனங்களை நிறுத்திவிட்டு அரசு சார்பில் இலவசமாக ஏற்பாடு செய்துள்ள பேருந்துகள் மூலம் புதுச்சேரிக்கு அழைத்து வரப்படுவர்” என்றார்.
இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயார் நிலையில் புதுச்சேரி