ETV Bharat / bharat

பச்சிளம் குழந்தைகள் இறந்த விவகாரம் - விரிவான அறிக்கை சமர்பிக்க ஆட்சியருக்கு உத்தரவு - மகாராஷ்டிரா குழந்தைகள் இறப்பில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா அரசு மருத்துவனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்பிக்க சிபிசி தேசிய தலைவர் பிரியங்க் கனுங்கோ உத்தரவிட்டுள்ளார்.

மும்பை
மும்பை
author img

By

Published : Jan 10, 2021, 5:07 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் (ஜனவரி 8) நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட புகையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த 17 பச்சிளம் குழந்தைகளில், 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்த பிரிவிலிருந்த 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைவாக தீயை கட்டுப்படுத்தினர். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பிக்க குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தேசியத் தலைவர் பிரியங்க் கனுங்கோ உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "புதிதாக பிறந்த குழந்தைகள், எவ்வாறு பராமரிக்க வேண்டும் என மத்திய சுகாதார ஆணையம் முன்பே வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. பிறந்த குழந்தை பராமரிப்பு சிறப்பு பிரிவின் கீழ் (Special Newborn Care Unit) ஏற்பாடு என்னவாக இருக்க வேண்டும், குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (Pediatric intensive care unit) ஏற்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்று பிரத்யேகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழக்க நேர்ந்தது. இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இவ்விவகாரம் குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆட்சியர் முழு அறிக்கை சமர்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.