மகாராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் எட்டப்பள்ளி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், இன்று(மே.21) காலை அப்பகுதியில் மாநில காவல் துறையின் சி-60 பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் துறைக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. தற்போது வரை 13 நக்சல்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கட்சிரோலி துணை காவல் ஆய்வாளர் சந்திப் பாட்டீல் கூறுகையில், "இந்த அதிரடி நடவடிக்கை மகாராஷ்டிரா காவல் துறைக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இந்த என்கவுண்டரில் மேலும் பல நக்சல்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது" என்றார்.