கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் வாக்குகளைப் பிரிக்க ஹைதராபாத்திலிருந்து வந்த ஒரு கட்சிக்கு பாஜக பணம் தருவதாக ஏஐஎம்ஐஎம் கட்சியை விமர்சித்திருந்தார்.
மம்தாவின் இந்தக் கருத்திற்கு பதிலளித்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி, தங்களது உரிமைகளுக்காக சிந்திக்கும், பேசும் இஸ்லாமியர்களை மம்தா பானர்ஜிக்கு பிடிக்கவில்லை. இங்கு யாரும் யாரிடமிருந்தும் பணம் வாங்குவதில்லை. மம்தா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
பிகாரில் தங்களது ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாக்களித்த மக்கள் குறித்தும் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்லாமிய வாக்காளர்கள் ஒன்றும் திரிணாமுல் காங்கிரஸிற்கும், மம்தா பானர்ஜிக்குமான சொத்து அல்ல. பிகார் தேர்தலில் சிறிய கட்சிகளால் ஏற்பட்ட விபரீதங்கள் என்னவென்று நினைவில் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஓவைசி மூலம் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க கோடிக்கணக்கில் செலவிடும் பாஜக - மம்தா