ETV Bharat / bharat

கர்நாடகாவில் முருக மடாதிபதி பாலியல் புகாரில் கைது - சிவமூர்த்தி முருக சரணரு

கர்நாடகாவில் ஸ்ரீ முருக மடத்தின் மடாதிபதியான சிவமூா்த்தி முருக சரணரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் மாணவிகள் பாலியல் பலாத்கார வழக்கில் மடாதிபதி கைது

author img

By

Published : Sep 2, 2022, 9:45 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் செயல்பட்டுவரும் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளார். இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகள் ஒன்றில் படிக்கும் 2 மாணவிகள் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவிகள் மைசூருவில் உள்ள தனியார் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளது. அதனடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் எஸ்.சி. என்பதால், மடாதிபதி மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொர்ந்து மடாதிபதி கைது செய்யப்பட்டார்.

அதன்பின் சித்ரதுர்கா நீதிமன்றத்தில் மாணவிகள் நேரில் வாக்குமூலம் அளித்தனர். அப்போது நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது. 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு மடாதிபதியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் காவலில் வைக்கப்பட இருந்த மடாதிபதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவமூர்த்தி முருக சரணருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.