ETV Bharat / bharat

'லவ் ஜிகாத்' முறையில் மாடலிங் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார்!

மும்பையில் வசித்து வரும் மாடலிங் இளம்பெண் ஒருவருக்கு, லவ் ஜிகாத் முறையில் தொழிலதிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

’லவ் ஜிகாத்’.. மாடலிங் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார்

author img

By

Published : Jun 1, 2023, 10:27 AM IST

மும்பை: பீகார் மாநிலம் பகல்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாடலிங் துறையில் பணி புரிந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வெர்சோவா பகுதியில் வசித்து வரும் இந்த பெண், தற்போது மும்பையிலேயே பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், அப்பெண் தன்னை ஒருவர் வற்புறுத்தி திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும், அதேநேரம் மதம் மாற்ற முயற்சிப்பதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இயங்கி வரும் யாஷ் மாடல் நிறுவனத்தில் மாடலிங்காக இருந்தேன். நான் அங்கு ஒன்றரை ஆண்டுகள் வரை பணி புரிந்தேன். அப்போது யாஷ் மாடல் நிறுவனத்தின் இயக்குனர் தன்வீர் அக்தர் கான் எனக்கு அதிகப்படியான தொல்லைகள் கொடுத்தார்.

அவ்வாறு எனக்கு தொல்லைகள் கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னை திருமணம் செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தினார். எனவே, நான் அந்த நிறுவனத்தை விட்டு நேராக பகல்பூருக்குச் சென்றேன். பின்னர், எனது பணி நிமித்தத்திற்காக மும்பைக்கு வந்து, வெர்சோவா பகுதியில் வாழ்ந்து வருகிறேன்.

ஆனால், தன்வீர் அக்தர் கான் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தே வந்தார். அதிலும், மும்பைக்கே வந்து எனக்கு தொல்லை கொடுத்தார். மேலும், என்னை மதம் மாற வேண்டும் என அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். அதை நான் மறுத்தேன். ஆகவே, என்னை கொல்வதற்கான முயற்சிகளிலும் தன்வீர் கான் ஈடுபட்டார்.

அது மட்டுமல்லாமல், தன்வீரின் குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தால், நான் அவனை புரிந்து கொண்டேன். இருப்பினும், அவன் எனக்கு தொல்லை கொடுத்து மிரட்டி வந்தான். மேலும், என்னுடைய சில புகைப்படங்களை எடிட் செய்து, அதனை அவனுடைய உறவினர்களுக்கு அனுப்பினார். இந்த நிலையில், இது தொடர்பாக நான் காவல் துறையில் புகார் அளித்தேன். ஆனாலும், அந்தப் புகார் மீது காவல் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இது தொடர்பாக தன்வீர் அக்தர் கான் கூறுகையில், “என் மீது குற்றம் சாட்டிய பெண் என்னை ஏமாற்றி விட்டாள். இதனால் எனக்கு எனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், என்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும்போது, நிறுவனத்தின் சில டேட்டாக்களை திருடி, நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டார்” என கூறி உள்ளார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் மும்பை காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மும்பை காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சமீப காலங்களாக மாடலிங் துறை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கென்ய பெண்களை வைத்து பாலியல் தொழில் - சென்னையில் இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.