உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல கேங்க்ஸ்டர் முக்தார் அன்சாரிக்கு சிறையில் கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தின் பந்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவருடன் சேர்ந்த மேலும் 32 சிறைக்கைதிகளுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. பிரபல ரௌடியான முக்தார் அன்சாரி பின்னாளில் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துகொண்டார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் தண்டனைக்குள்ளான முக்தார் அன்சாரி பஞ்சாப் மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம்தான் அவர் உத்தரப் பிரதேச சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் 500 ஆக்ஸிஜன் யூனிட்டுகள் - பிரதமர் அறிவிப்பு