போபால்: மத்தியப் பிரதேசத்தின் விடிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச் பசோதா பகுதியில் உள்ள கிணற்றில் சிறுமி ஒருத்தி தவறுதலாக விழுந்துவிட்டார். அவரை மீட்கும் பணிகள் நடைபெற்றபோது, கிணற்றைச் சுற்றி ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதில், எடைதாங்கமால், கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன.
நேற்றுடன் மீட்புப்பணிகள் முடிவடைந்த நிலையில், 11 பேரின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!