ETV Bharat / bharat

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தாய்-மகன் - குவியும் பாராட்டுகள்! - பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தாய் மகன்

மேற்குவங்க மாநிலத்தில் படிப்பை கைவிட்ட தாயும், மகனும் தற்போது ஒன்றாக சேர்ந்து படித்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Mother
Mother
author img

By

Published : Mar 2, 2023, 9:55 PM IST

பர்த்வான்: மேற்குவங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் காட்ஷிலா கிராமத்தைச் சேர்ந்தவர், ஆயிஷா பேகம். அங்கன்வாடி ஊழியரான ஆயிஷா பேகத்தின் கணவர் ஒரு விவசாயி. இவருக்கு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மூத்த மகள் ஃபிர்தௌசி எம்ஏ வரை படித்தார். ஆனால், மகன் பர்வேஸ் ஆலம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.

படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்த ஆயிஷாவின் மகள் ஃபிர்தௌசி, தனது தாயையும், சகோதரனையும் படிக்கும்படி அறிவுறுத்தினார். அவரது ஊக்கத்தால் இருவரும், காட்ஷிலாவில் உள்ள சித்திக் உயர்நிலை மதரஸா பள்ளியில் சேர்ந்தனர். பின்னர் தாய் - மகன் இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகினர்.

கடந்த சில நாட்களாக மேற்குவங்கத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆயிஷா பேகமும், அவரது மகனும் தேர்வு எழுதி வருகின்றனர். மெமரி உயர்நிலை மதரஸாவில் இவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களுக்கு பொதுமக்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆயிஷா பேகம் கூறும்போது, "என்னால் படிக்க முடியவில்லை. என் மகள் படித்திருக்கிறாள். அவள் என்னை படிக்கும்படி ஊக்குவித்தாள். படிப்பது என் வேலைக்கு உதவும் என்றும் கூறினாள். அதனால், நானும் என் மகனும் மதரஸா பள்ளியில் சேர்ந்தோம். நாங்கள் நன்றாக படித்து, தேர்வு எழுதுகிறோம். என்னைப் போல படிப்பை பாதியில் விட்டவர்கள், படிப்பைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்" என்றார்.

மெமரி உயர்நிலை மதரஸாவின் தலைமை ஆசிரியர் துரத் அலி கூறும்போது, "எங்களது பள்ளியில் முதல் முறையாக தாய் - மகன் ஒன்றாகத் தேர்வு எழுதுகிறார்கள். ஆயிஷா பேகத்திற்கு வாழ்த்துகள். அவரைப் பார்க்கும்போது, திருமணத்திற்குப் பிறகு படிப்பை கைவிட்ட பல பெண்களுக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படும். ஆயிஷா மேலும் படிக்க ஆசைப்பட்டால், அதற்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பல் முளைக்கும் காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளும், தீர்வுகளும்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.