ETV Bharat / bharat

உடனுக்குடன்: பிரதமர் மோடி தமிழ்நாடு பயணம்! - மோடி தமிழ்நாடு வருகை

PM Modi
பிரதமர் மோடி
author img

By

Published : Feb 25, 2021, 11:25 AM IST

Updated : Feb 25, 2021, 1:08 PM IST

13:06 February 25

2016இல் வாக்களித்த மக்களை ஏமாற்றவிட்டது காங்கிரஸ் கட்சி. இந்த முறை வாக்களிக்கும் முன்னர் வளர்ச்சிக்கு எதிரானவர்களை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியன் வளர்ச்சி அரசியலுக்கு வாக்களிக்க வேண்டும்.

12:59 February 25

வர்த்தகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. இங்கு இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு பாஜக அரசு உருவாக்கி தரும். புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான உதவியையும் அளித்து வருகிறது. கல்வி, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடல் வணிகம் இல்லாமல் சுயசார்பு இந்தியா என்பது சாத்தியமில்லை. 

கூட்டுறவுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

12:53 February 25

புதுச்சேரி வந்த ராகுல்காந்தி மீன்வளத்துக்கு தனி அமைச்சசகம் இல்லை என்று பொய் கூறியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே மீன்வளத்துறை அமைச்சகத்தை அமைத்து செயலாற்றி வருகிறது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பின்போது பாராமுகமாக இருந்து வந்தது காங்கிரஸ் அரசு

12:47 February 25

மத்திய அரசு அளித்த நிதியை புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு சரியாக பயன்படுத்தவில்லை. மத்திய அரசுக்கு சரியாக ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. 

காங்கிரஸ் அரசின் ஜனநாயக விரோத போக்கின் காரணமாக புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவில்லை. 

12:42 February 25

ராகுல் காந்தியிடம், நாரயணசாமி குறித்து பெண் புகார் அளித்த வீடியோ குறித்து பேசினார் பிரதமர் மோடி. நாராயணசாமி தவறாக மொழிப்பெயர்த்துக் கூறியதாக தெரிவித்தார். நாட்டுக்கு உண்மையை கூறுவதற்கு முன் பொய் உரைத்தார் நாராயணசாமி.

காங்கிரஸ் கட்சியனரின் இத்தகைய பொய்யை மக்களால் எப்படி நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பினார். பொய் சொல்வதில் கைத்தேர்ந்தவர்களாக உள்ளார்கள் காங்கிரஸ்காரர்கள். அதில் பதங்களங்களை வென்றவர்களாக உள்ளார்கள். அவர்கள் பிரிவினைவாத அரசியலை செய்கிறார்கள்.

12:34 February 25

சாலை, சுகாதாரம், விளையாட்டு, கடல்சார் பொருளாதார திட்டங்கள் புதுச்சேரியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியா இயக்கத்தில் புதுச்சேரி முக்கிய பங்கு உள்ளது. 

புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் இல்லாத சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். 2016இல் வாக்களித்த புதுச்சேரி மக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது. இங்கு மக்களுக்கான ஆட்சி அமையவில்லை.

12:33 February 25

புதுச்சேரி லாஸ்பேட்டையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

12:10 February 25

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி காட்டி, கருப்பு பலூன்கள் பறக்க விட்ட 30 பேட் கைது செய்யப்பட்டனர் 

12:08 February 25

கடல்சார் பொருளாதாரத்தில் ஏராளமான  வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. கிராமப்புற கடல்புற இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. புதுச்சேரி மேம்பாட்டுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் உதவும். இங்கு வாழும் மக்கள் பல மொழிகள் பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். 

11:59 February 25

பிரதமர் மோடி உரை

புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கியிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.  உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளால் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

காரைக்கால் நெடுஞ்சாலை திருநள்ளாறு, வேளாங்கண்ணி, நாகூர் ஆன்மிக தளங்களுக்கு சென்று வர பொதுமக்களுக்கு உதவும் விதமாக அமையும். சாலை மேம்பாட்டின் மூலம் தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகும்.

மாணவர்களுக்கு கல்விதான் முக்கியம் என்பதை, "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒறுவருக்கு மாடல்ல" என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி பேசினார் மோடி

11:51 February 25

ஜிப்மரில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம், பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த சேமிப்பு மையத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேசி வருகிறார். 

11:45 February 25

சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ. 44 கோடி மதிப்பில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்க அடிக்கல்

காரைக்காலில் உள்ள ஜிப்மரில் ரூ. 491 கோடி மதிப்பில் புதிய வளாகம் கட்டுவதற்கு அடிக்கல்

இந்திரகாந்தி விளையாட்டு திடலில் ரூ. 7 கோடி மதிப்பில் 400 மீ செயற்கை ஓடுதளம் அமைக்க அடிக்கல்

சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான என்எச் 45ஏ நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல். இதன் மதிப்பு ரூ. 2 ஆயிரத்து 426 கோடி.

11:37 February 25

ஹெலிகாப்டரில் மூலம் புதுச்சேரி வந்தடைந்த பிரதமர் மோடி ஜிப்மர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அவரை வரவேற்றார்.

புதுச்சேரியில் நான்கு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

10:27 February 25

சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். 

Last Updated : Feb 25, 2021, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.