ராய்ப்பூர்(சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மாயமானார். கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் வீடு அருகே உள்ள காலி இடத்தில் அவளது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக 14 வயது சிறுவனை கைது செய்தனர்.
விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக சிறுவன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவன் மீது கொலை, கடத்தல், போக்சோ உள்ளிட்ட வழக்குகளைப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல் வாகனத்தை முற்றுகையிட்டு போலீசாரின் பிடியில் இருந்த சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கினர். தொடர்ந்து கிராம மக்களின் பிடியில் இருந்த சிறுவனை மீட்டு போலீசார் அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க:பணி நேரத்தில் ரீல்ஸ் எடுத்த பெண் காவலர்கள்... ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு..