டெல்லி: ஒன்றிய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் கீழ், நாடு முழுவதும் மாசு கட்டுப்பாடில் உள்ள (பியூசி) சான்றிதழின் பொதுவான வடிவமைப்புக்கான அறிவிக்கையை, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், ஜூன் 14-ஆம் தேதி வெளியிட்டது.
மாசு கட்டுப்பாடு சான்றிதழின் (பியூசி)முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- தேசிய பதிவேட்டுடன் பியூசி தரவை இணைப்பதற்காக, நாடு முழுவதும் ஒரே சீரான சான்றிதழின் வடிவமைப்பை அறிமுகப்படுத்துவது.
- முதல்முறையாக, நிராகரிப்புச் சீட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. சோதனையின்போது சம்பந்தப்பட்ட நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பை விட கூடுதலான மதிப்பு இருக்கும் வாகனத்தின் உரிமையாளருக்கு நிராகரிப்புச் சீட்டு பொதுவான வடிவமைப்பில் அளிக்கப்படும்.
- வாகன பழுதுபார்க்கும் நிலையங்களில் இந்த ஆவணத்தைக் காண்பிக்கலாம். மற்றொரு மையத்தில் சோதனை செய்யும் போது, பியூசி சான்றிதழ் மையக் கருவி பழுதடைந்திருந்தால், இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- வாகனம் சம்பந்தமான தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் அதாவது, (i) வாகன உரிமையாளரின் செல்போன் எண், பெயர் மற்றும் முகவரி, (ii) இன்ஜின் எண் மற்றும் சேசிஸ் எண் (கடைசி நான்கு எண்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும், எஞ்சியவை மறைக்கப்பட்டிருக்கும்).
- வாகன உரிமையாளரின் செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு மற்றும் கட்டணம் சம்பந்தமான தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக அந்த எண்ணிற்கு அனுப்பப்படும்.
- வெளியீட்டு தர நிர்ணயங்களுக்கு உட்படாத மோட்டார் வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட பியூசி சோதனை நிலையங்களில் சோதனை செய்வதற்காக, வாகனம் பற்றிய தகவல்களை அமலாக்க அதிகாரி எழுத்துப்பூர்வமாகவோ, அல்லது மின்னணு வாயிலாகவோ ஓட்டுனர் அல்லது பொறுப்பாளருக்கு நேரடியாக அனுப்பிவைப்பார்.
- வாகன ஓட்டியோ அல்லது அதன் பொறுப்பாளரோ இதற்கு இணங்கவில்லை என்றாலோ அல்லது வாகனம் இசைந்து கொடுக்கவில்லை என்றாலோ வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
- வாகன உரிமையாளர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால், பியூசி சான்றிதழ் வழங்கப்படும் வரையில் வாகனத்தின் பதிவு சான்றிதழையும், அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிகளையும் பதிவு செய்யும் அலுவலர் நிறுத்திவைக்கக் கூடும்.
- தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், மாசு வெளியிடும் வாகனங்களை திறம்பட கண்காணிக்க முடியும்.
- படிவத்தில் க்யூ ஆர் குறியீடு அச்சிடப்பட்டிருக்கும். பியூசி மையம் குறித்த முழு தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும். இதையும் படிக்கலாமே: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின்