சண்டிகர்: இந்தியாவின் தடகள அடையாளம் மில்கா சிங்கின் மனைவி நிர்மலுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவிட் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையி்ல் இன்று (ஜூன் 14) அதிகாலை 4 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
இந்தத் தகவலை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. கணவர் மில்கா சிங்குடன் வசித்துவந்த நிர்மல் கவுருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
அண்மையில் மில்கா சிங்குக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 39 மனைவிகள், 94 குழந்தைகள்- உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்!