ராய்ப்பூர் : 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சியை கைப்பற்ற 46 தொகுதிகள் பெரும்பான்மை தேவைப்பட்டதில், பாஜக 54 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தை நெருங்கிய போதிலும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்தது. முதலமைச்சர் ரேசில் விஷ்ணு தியோ சாய், ராமன் சிங், அருண் சாவ், ஒ.பி. சவுத்ரி, ரம்விச்சர் நெதம், சரோஜ் பாண்டே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக இணை பொறுப்பாளரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான மன்சுக் மாண்ட்வியா தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/8CT57rw9EO
— ANI (@ANI) December 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/8CT57rw9EO
— ANI (@ANI) December 10, 2023#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/8CT57rw9EO
— ANI (@ANI) December 10, 2023
பழங்குடியின இனத்தை சேர்ந்தவரான விஷ்ணு தியோ சாய் இதற்கு மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குன்குரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87 ஆயிரம் வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்த போட்டியிட்ட வேட்பாளர்களை வெற்றி கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக காணப்படும் விஷ்ணு தியோ சாய், முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் ராமன் சிங்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி விவசாய குடும்பத்தில் விஷ்ணு தியோ சாய் பிறந்தார்.
இவரது தாத்தா புத்நாத் கடந்த 1947 - 1952 காலக்கட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் இவரது பெரியப்பா நர்ஹரி பிரசாத் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், எம்.பியாகவும் அப்போதைய ஜன சங்க அமைப்பில் பதவி வகித்தார். சிறுவயது முதலே அரசியல் பின்புலத்துடன் வளர்ந்த விஷ்ணு தியோ சாய், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த கையோடு அரசியலில் களம் கண்டார்.
தொடர்ந்து பாகியா கிராமத்தின் தலைவராக விஷ்ணு தியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மாநில அரசியலில் குதித்த விஷ்ணு தியோ சாய் அப்போதைய பிரிக்கப்படாத மத்திய பிரதேசத்தின் டப்கரா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மெல்ல மெல்ல அரசியலில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விஷ்ணு தியோ சாய், 1999ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
-
#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/PtAOM52JKa
— ANI (@ANI) December 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/PtAOM52JKa
— ANI (@ANI) December 10, 2023#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/PtAOM52JKa
— ANI (@ANI) December 10, 2023
அப்போதைய காலக்கட்டத்தில் உணவு, பொது விநியோகம், குடிமைப் பொருள் விநியோகம் துறைகளை அடக்கிய குழுவின் உறுப்பினராக செயல்பட்டார். இரண்டு முறை 2006 -2010 மற்றும் 2014 ஜனவரி - ஆகஸ்ட் இடைப்பட்ட காலத்தில் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக பொறுப்பு வகித்த விஷ்ணு தியோ சாய்க்கு கடந்த 2019ஆம் ஆண்டு எம்.பி பதவிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தேசிய நிர்வாகிகள் குழுவில் இடம் பிடித்தார். இந்நிலையில், குன்குரி சட்டமன்றத்தில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87 ஆயிரத்து 604 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய விஷ்ணு தியோ சாய், முதலமைச்சர் என்ற முறையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தனது முன்னுரிமை என்றும் ஐந்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
பதவியேற்றதும் சுமார் 18 லட்சம் பேருக்கு பிரதான் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் விடுவிக்கப்படும் என்று கூறினார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி விவசாயிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான போனஸ் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அளித்த அனைத்து உத்தரவாதங்கள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க : சத்தீஸ்கர் முதலமைச்சர் தேர்வு - யார் இந்த விஷ்ணு தியோ சாய்?