ETV Bharat / bharat

ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடித் திருவிழா தெலங்கானாவில் தொடக்கம்

ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடித் திருவிழாவான மேதாரம் ஜதாரா வழக்கமான உற்சாகத்துடன் தெலங்கானாவில் தொடங்கியது.

மேதாரம் ஜதாரா
மேதாரம் ஜதாரா
author img

By

Published : Feb 18, 2022, 2:13 PM IST

ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மேதாரம் ஜதாராவின் முதல் நாள் கொண்டாட்டம் தெலங்கானாவில் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கியது. தெலங்கானாவின் கோயா பழங்குடியினர் நடத்தும் இந்தத் திருவிழா சரளம்மா மேதாரம் தளத்திற்கு வருவதை குறிப்பதாகும்.

கும்பமேளாவுக்கு அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக மேதாரம் ஜதாரா, தெலங்கானா கோயா பழங்குடியினரால் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடித் திருவிழாவான மேதாரம் ஜதாரா, சம்மக்கா, சரளம்மா ஆகியோரை பெருமைப்படுத்தும் விதத்தில் நடத்தப்படுகிறது.

ஈராண்டுக்கு ஒருமுறை மகா (பிப்ரவரி) மாதத்தில் பௌர்ணமி தினத்தில் இது கொண்டாடப்படுகிறது. சரளம்மா, சம்மக்காவின் மகள். மேதாரம் அருகே உள்ள கன்னேப்பள்ளி என்னும் சிறிய கிராமத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த திருவிழாவையொட்டி சரளம்மாவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தெலங்கானா பழங்குடித் திருவிழா
தெலங்கானா பழங்குடித் திருவிழா

மேதாரம் ஜதாரா திருவிழாவில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழங்குடியின மக்களுக்கிடையிலும், பக்தர்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை பராமரிக்கும் வகையில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த ஜதாரா பண்டிக்கைக்கு வருகை தரவுள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இமாலயத்தில் இளைப்பாற வந்திருக்கும் ரஷ்யப்பறவைகள் - ஒரு ஃப்ரஷ் கிளிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.