டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (89) புதன்கிழமை (அக்.13) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரின் உடல் நிலை குறித்து மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில், “அவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது, இருப்பினும் அவரது உடல்நிலை சீரான நிலையில் குணமடைந்துவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங்குக்கு ஏற்கனவே இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர் நிதிஷ் நாய்க் தலைமையிலான இருதய மருத்துவ குழுவினரும் அவரை தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : மன்மோகன் சிங் உடல்நிலையை நேரில் விசாரித்த ராகுல்