ETV Bharat / bharat

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் - 2 அமைச்சர்கள் ராஜினாமா

மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் கைதான, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி
சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி
author img

By

Published : Feb 28, 2023, 7:40 PM IST

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, 8 மணி நேர விசாரணைக்குப் பின் சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க, நேற்று (பிப்.27) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி, மணீஷ் சிசோடியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் நாங்கள் முதலில் தலையிட விரும்பவில்லை. மனுதாரர் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம். உங்கள் தரப்பு வாதங்களை அங்கு தெரிவிக்கலாம்" என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மணீஷ் சிசோடியா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • सत्यमेव जयते …
    सुप्रीम कोर्ट से नही मिली राहत…

    शराब मंत्री सारे राज उगलेगा , और जाँच की आँच जल्द मास्टरमाइंड तक भी जाएगी #DelhiLiquorScam #ManishSisodia

    — Manoj Tiwari 🇮🇳 (@ManojTiwariMP) February 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2 அமைச்சர்கள் ராஜினாமா: இதற்கிடையே, சிறையில் இருக்கும் அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இருவரது ராஜினாமாவையும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமா கடிதம், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின், கடந்த 10 மாதங்களாக சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "சந்திராயன்-3 விண்கலத்தின் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி" - இஸ்ரோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.