மங்களூரு : மங்களூரு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் அனிதா ரவிசங்கர். இவரிடம் 2012ஆம் ஆண்டு பி.ஹெச்டி ஆராய்ச்சி மாணவியாக இருந்தவர் பிரேமா.
அப்போது அனிதா ரவிசங்கர், பி.ஹெச்டி மாணவியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் மாணவி, ரூ.10 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என இரு முறை பணம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் மேலும் ரூ.16 ஆயிரம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக பி.ஹெச்டி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், லோக் அயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜகாடி, லஞ்சம் பெற்ற உதவி பேராசிரியைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க : 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்