ஜார்கண்ட்: ஹசாரிபாக் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் சோன்கார். இவருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா தேவி(27) என்பவருக்கும் திருமணமாகி 15 நாள்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குழந்தை பிறந்த முதலே இவர் தனது மனைவியை சந்தேகப்பட்டதால் இவருக்கும் இவரது மனைவிக்கும் வாக்குவாதங்களும் சண்டைகளும் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் சம்பவத்தன்று, வாக்குவாதம் முற்றியதில் தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு பிறந்து 15 நாள்கள் ஆன குழந்தையுடன் விட்டை பூட்டி விட்டு தப்பியோடியுள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்ட வந்தனாவின் மைத்துனர் கதவை உடைத்து உள்ளே வந்து பார்க்கும் போது ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக வந்தனா இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வந்தனா தேவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ராஜேஷ் சோன்காரின் தம்பியையும் தாயையும் விசாரித்தனர்.
அதில், இருவருக்கும் பல நாள்களாக சண்டை நிலவியது தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் நடக்கும் போது சோன்காரின் தம்பி டியூசன் சென்றுள்ளார் என்பதும், இவரது தாயார், பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, ராஜேஷ் சோன்காரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:அண்ணாமலை ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - திமுக சார்பில் நோட்டீஸ்