பெடுல்(மத்தியப்பிரதேசம்): பெண் முன்னே ஆபாச செயலில் ஈடுபட்டவரின் ஆண் உறுப்பை அந்த கிராமத்து மக்கள் தீயில் எரித்து தண்டித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவத்தில் கிராமத்து மக்களில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆக.6ஆம் தேதியன்று ஒரு பெண் முன்னே, ஆடையின்றி நின்று ஆபாச செயல் செய்த நபரின் அந்தரங்கை உறுப்பை தீ வைத்து எரித்து தண்டித்துள்ளனர், பெடுல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள். இதனையடுத்து, கடும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை எஸ்.பி. சிமலா பிரசாத் கூறுகையில், “தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் முன்னே ஆடையின்றி நின்று ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அவரைத் தண்டித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சுதேஷ் கவ்டே மற்றும் கிருஷ்ணா உய்க்கே என்ற நபர்களை கைது செய்துள்ளோம். தற்போது தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர் நலமடைந்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Video:சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த சில்மிஷ இளைஞர்கள்