ETV Bharat / bharat

லிவிங் டு கெதர் பெண்ணின் சடலத்துடன் வாழ்ந்த இளைஞர் - கொலையா? தற்கொலையா?

author img

By

Published : Apr 11, 2023, 9:39 PM IST

லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்த பெண் இறந்த நிலையில் அவரது சடலத்துடன் ஆண் நண்பர் இரண்டு நாட்கள் தங்கி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Dead
Dead

ராய்பூர் : லிவிங் டு கெதரில் வாழ்ந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்துடன் இரண்டு நாள் இளைஞர் வாழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்திஸ்கர் மாநிலம் ராய்பூர் அடுத்த லால்பூர் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். தன்னுடன் பணியாற்றிய பசாந்தி யாதவ் என்ற பெண்ணுடன் கோபி லிவ்விங் டு கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோபி குடியிருந்த வீட்டில் பசாந்தியின் நடமாட்டத்தை காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பசாந்தி குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்ட போதும், அவருக்கு உடல் நிலை சரியில்லை என கோபி தெரிவித்து உள்ளார். இந்நிலையில், கோபி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோபியின் வீட்டை திறந்து உள்ளே பார்த்து உள்ளனர். அங்கு பசந்தி அழுகிய நிலையில் கட்டிலில் சடலமாக கிடந்து உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பசந்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து கோபியை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

பசந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், போலீசாரிடம் மாட்டி கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் இரண்டு நாட்களாக பசந்தியின் சடலத்துடன் தூங்கி எழுந்ததாக கோபி தெரிவித்ததாக போலீசார் கூறினர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் பசந்தியின் இறப்புக்கு என்ன காரணம் என தெரிய வரும் என்றும் அதுவரை தொடர் விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : எலியை கொன்றவர் மீது கொலை வழக்கு! இது என்ன புதுக் கதையா இருக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.