மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் பகுதியில் உடல் உறவுக்கு மறுத்த மனைவியை கணவனே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் நடந்துள்ளது. சந்திராபூர் பகுதியில் உள்ள வயல்வெளியில் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு ஜனவரி 6ஆம் தேதி தகவல் கிடைத்துள்ளது.
இந்த உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், அது யவத்மால் பகுதியில் வசித்துவரும் சஞ்சய் சக்ரே என்பவரது மனைவி மாயா பாய் சக்ரேவின் உடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சஞ்சய் சக்ரேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அதாவது, ஜனவரி 5ஆம் தேதி இரவு சஞ்சய் சக்ரே மனைவி மாயாவை உடலுறவுக்கு அழைத்துள்ளார்.
ஆனால், மாயா மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சஞ்சய் மாயாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் உடலை வயல்வெளிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதன்பின் வீடு திரும்பி உறவினர்களிடம் மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சஞ்சய் சக்ரே வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது