இணையத்தில் இளைஞர்கள் நண்பரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவரது பிறந்தநாளைக் கொண்டாட நள்ளிரவில் நண்பர்கள் சிலர் சாலையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது, நண்பர்கள் அனைவரும் இளைஞரின் முகத்தில் கேக்கை அழுத்திப் பூசியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கைகளில் வைத்திருந்த காகித கைவெடி பட்டாசு உருளையை வைத்து அவரது மண்டையில் தாக்கி, அடித்து உதைக்கின்றனர். தலையில் அடித்தது, கேக்கில் முகம் பதித்தது என ஏற்கனவே திணறிப்போயிருந்த அவர், ஒருகட்டத்தில் மயங்கி விழுந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இந்நிலையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களால், ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காணொலி என்றும்;பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இவ்வாறு விபரீதங்கள் நிகழாமல் இருக்க எடுக்கப்பட்ட விழிப்புணர்வு காணொலி என்றும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : 8 வயது மகனை தாக்கி, மகளை வீடியோ எடுக்க சொன்ன கொடூர தந்தை