ETV Bharat / bharat

கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள மம்தா பானர்ஜி!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளை தனித்தனிக் குழுவாக சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Dec 18, 2020, 12:30 PM IST

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களைக் குழுக்களாக மம்தா பானர்ஜி சந்தித்துவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏவான சுவேந் ஆதிகாரி, கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை புதன்கிழமை முறையாக வழங்கினார். மேலும், மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் சுவேந் ஆதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏ சுவேந் தனது ராஜினாமா கடிதத்தில், "அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினராகவும், கட்சியிலும், அதனுடன் இணைந்த அமைப்புகளிலும் நான் வகித்துவந்த மற்ற அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.

கட்சியில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி உறுப்பினராக நான் செலவழித்த நேரத்தை நான் மதிப்புமிக்கதாக உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏ சுவேந் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.

இதையும் படிங்க: சீன கடற்பகுதிகளில் சிக்கியுள்ள 39 இந்தியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.