ETV Bharat / bharat

ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் பேருந்தில் மீது மோதிய கார்: 5 பேர் உயிரிழப்பு! - தேசிய செய்திகள்

கார் ஓட்டுநர் கண்ணயர்ந்ததால், சாலைத் தடுப்பைக் கடந்து சென்ற கார் எதிரே வந்த பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர்.

5 killed in road accident in Maharashtra, மகாராஷ்டிரா சாலை விபத்து
5 killed in road accident in Maharashtra
author img

By

Published : Feb 23, 2021, 9:52 AM IST

அவுரங்காபாத் (மகாராஷ்டிரா): பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அவுரங்காபாத் நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநர் கண்ணயர்ந்ததால், மறுபுறத்தில் அகமதுநகருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது சாலையின் தடுப்பைக் கடந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த ஐந்து பேர் உயிரிழந்தனர். அனைவரின் உடலும் கைப்பற்றப்பட்டு நெவாசா கிராம அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பெண் தேடுபவரா நீங்கள் - கொஞ்சமல்ல... ரொம்ப உஷாரா இருங்க!

உயிரிழந்தவர்கள் சாந்தனு நாராயண் காக்தே (35), கைலாஸ் நியூரே (35), விஷ்ணு சவான் (31), ரமேஷ் தஷ்ரத் குகே (40), கார் ஓட்டுநர் நாராயண் வர்காட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.