கடந்த பத்து நாள்களில், கரோனா தினசரி பரவல் திடீரென அதிகரித்தது. பெருந்தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ளதா என்ற அச்சம் நிலவிவரும் நிலையில், பரவலைத் தடுக்க மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மார்ச் 20ஆம் தேதி இரவு 10 மணி முதல் 22ஆம் தேதி காலை 6 வரை போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய நகரங்கள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் தேதி வரை, பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இன்று மட்டும் 1,140 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 2,73,097 ஆக உயர்ந்துள்ளது.