ETV Bharat / bharat

வாயில் பல்லி நுழைந்ததால் சிறுவன் உயிரிழப்பா? சத்தீஸ்கரில் மர்மம்! - சத்தீஸ்கர் சிறுவன் வாயில் பல்லி நுழைந்து மரணம்

சத்தீஸ்கரில் சிறுவன் வாயில் பல்லி நுழைந்ததால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Lizard
Lizard
author img

By

Published : Jul 24, 2023, 7:19 PM IST

கோர்பா : சத்தீஸ்கரில் வாயில் பல்லியுடன் இரண்டரை வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாயில் பல்லி சென்றதால் சிறுவன் உயிரிழந்தானா அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நகின்பந்தா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சந்தே. இவரது மூன்றாவது மகன் ஜெகதீஷ். இரண்டரை வயதான ஜெகதீஷ் சம்பவத்தன்று தூங்கிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூங்கிக் கொண்டு இருந்த ஜெகதீசை விட்டு விட்டு அவரது தாய் மற்ற வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்து உள்ளார். சிறிது நேரம் கழித்து தூங்கிக் கொண்டு இருந்த மகன் ஜெகதீசை பார்த்த போது அசைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது.

உற்று நோக்கி பார்த்த போது ஜெகதீஷ் வாயில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. மகன் அசைவின்றி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போன அவரது தாய் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். சம்பவம் குறித்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார், ஜெகதீசின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வாயில் பல்லி சென்றதால் சிறுவன் ஜெகதீஷ் உயிரிழந்தானா, அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய அரசு மருத்துவக் கல்லூரியின் உதவி ஆசிரியர் பல்ராம் குர்ரே, பொதுவாக வீடுகளில் காணப்படும் பல்லி வகைகள் உயிரை கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டது கிடையாது என்று தெரிவித்து உள்ளார்.

சிறுவன் ஜெகதீஷ் வாயில் நுழந்த பல்லியால், மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டு அதனால் கூட மரணம் நேர்ந்து இருக்கலாம் என்று பல்ராம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லி வாயில் நுழைந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : EPFO Intrest Rate : வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.